Pages

Wednesday, July 29, 2020

கொரட்டுர் ஏரி பாதுகாப்பு மக்கள் இயக்கத்தின் சார்பில் கொரட்டூர் ஏரியில் மண்திட்டு அமைக்கும் பணிகள் 08-06-2019 அன்று துவங்கியது. முதலில் சுமார் 3 ஏக்கர் பரப்பளவுள்ள வேம்புத்திட்டு அமைக்கும் பணி இன்று துவங்கியது. கொரட்டூர் ஏரியின் மேற்புரம் இயற்கையாக அமைந்த சிறிய மேடான பகுதியை மேம்படுத்தும் பணிகள் துவக்கப்பட்டன. அந்த மேட்டினில் இருந்த கருவேல மரங்கள் மற்றும் புதர்கள் வேரோடு எடுக்கப்பட்டு அந்த மேடு ஜேசிபி இயந்திரங்களின் உதவியுடன் தூய்மைப்படுத்தப்பட்டது. வேம்புத்திட்டு என்ற பெயர்வர காரணமான வேப்பமரத்தை தவிர்த்து மற்ற வேண்டாத புதர்கள் அகற்றப்பட்டன. வேம்புத்திட்டினை உருவாக்க அதைச் சுற்றி 40 அடி அகலம் மற்றும் 5 அடி ஆழமான அகழி வெட்டி அந்த மண்ணை கொண்டு திட்டு உருவாக்கப்பட்டது. சுமார் 300 மரக்குழிகள் தோண்டப்பட்டு இயற்கை உரமிட்டு செம்மைப்படுத்தப்பட்டது. பறவைகள் தங்க ஏதுவாக ஆலமரம், அரசமரம் முதலான மரக்கன்றுகள் நடப்பட்டன. திட்டின் நடுவில் மழைநீர் சேகரிக்க சிறுகுட்டையும் வெட்டப்பட்டது. இந்த தீவுத்திட்டு மேம்பாட்டு பணியில் கொரட்டூர் ஏரி பாதுகாப்பு மக்கள் இயக்க உறுப்பினர்களுடன் பல்வேறு தன்னாலர்களும் கலந்துகொண்டு தீவுத்திட்டு சீரமைப்பில் பங்களிப்பு நல்கினர்.

0 comments:

Post a Comment